போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-08-30 12:03 GMT
கீழப்பாவூர் யூனியன் ஆவூடையானூர் பஞ்சாயத்து சாலடியூர் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது தெருவில் இருந்த மின்கம்பத்தின் தாங்குகம்பியை ஓரமாக மாற்றி அமைக்காமல் அப்படியே சாலை அமைத்தனர். இதனால் சாலையின் நடுவில் தாங்குகம்பி உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே அதனை சாலையோரமாக மாற்றி அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்