தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2023-08-27 18:21 GMT
பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை செல்லும் மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்