நாமக்கல்- மோகனூர் சாலையில் அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்பத்திரி நுழைவாயிலில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அவசர சிகிச்சைக்காக வருவோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் இருசக்கர வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.