தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கம்பத்துக்கு இரவு நேரத்தில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரங்களில் கம்பத்தில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் பொதுமக்கள், அங்கிருந்து கூடலூர் வந்து கம்பம் செல்லும் செல்லும் பொதுமக்கள் என பலரும் பஸ்கள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர். எனவே கம்பம்-கூடலூர் இடையே இரவு நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.