பஸ் வசதி தேவை

Update: 2023-08-23 16:06 GMT

சாத்தான்குளம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதி மாணவ-மாணவிகள் சாத்தான்குளத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். நொச்சிகுளம் வழியாக காலை, மாலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், மாணவ-மாணவிகள் பஸ்சில் கூட்ட நெரிசலில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பேய்க்குளம், நொச்சிகுளம் வழியாக சாத்தான்குளத்துக்கு காலை, மாலையில் அரசு டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்