புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, வடகாடு மற்றும் மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊரக சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளில் பெரும்பாலான லாரிகள் அதிக அளவில் தேங்காய் உரி மட்டைகளை ஏற்றி செல்கின்றன. அவற்றை முறையாக மூடாமல் செல்வதால் சாலையோரம் இருக்கும் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது உரசி செல்கிறது. இதனால் தேங்காய் உரி மட்டைகள் லாரிகளில் இருந்து விழுந்து சிதறி வருவதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்தான சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.