சென்னை அடையாறு, மகேந்திரா வங்கி எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின் மேற் கூரை சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.