கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை மற்றும் துருகம் சாலையின் ஓரத்தில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.