போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-08-20 15:53 GMT

சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட திம்மையன்புதூர் 3-வது வார்டில் உள்ள மெயின் வீதி சாலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை அகற்றி ரோட்டோரம் மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி