தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2023-08-20 11:35 GMT

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம், குமராவடியில் இருந்து ஆனங்கரைப்பட்டி வரை செல்லும் சாலையில் முத்துகோம்பைப்பட்டி பிரிவு சாலை அருகில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் சாலையோரம் செல்லும்போது நிலைதடுமாறி வாய்க்காலில் விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்