வெள்ளை வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2023-08-20 11:34 GMT

கரூர்-கோவை சாலையில் உள்ள முனியப்பன் சுவாமி கோவில் அருகே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்கின்றன. மேலும் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் வேகத்தடை உள்ளதை குறிக்கும் வாயில் வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணக் கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்