அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் வரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரியலூர் நகரத்திற்கு தினமும் காலையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் செல்கின்றனர். காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு அரியலூர் செல்வதற்கு எவ்விதமான பஸ்களும் இல்லை இதனால் பல நாட்களாக இப்பகுதிமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த இடைவெளியில் காலை 8 மணி அளவில் ஒரு அரசு பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.