கடலூர் மாவட்டத்தில் இயங்கும் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டிக்கெட் விலை குறித்த முழு விவரத்தை அந்தந்த பஸ்களில் ஒட்ட வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.