ஆலங்குளம் பஸ் நிலையத்துக்கு இரவு 9 மணிக்கு பிறகு எந்த பஸ்களும் செல்லாமல் மெயின் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் சாலையோரம் பொதுமக்கள் உடைமைகளுடன் பஸ்சுக்காக காத்திருப்பதால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இரவில் பஸ் நிலையத்துக்கு சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.