சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-08-13 17:19 GMT

நாமக்கல்- திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையம் பைபாஸ் மேம்பாலம் அருகில் சந்திக்கும் இடத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் லேசான மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்குகிறது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது. அத்துடன் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலையும் சேதமடைந்து குறைந்து வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்