ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா?

Update: 2023-08-13 16:56 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பலவற்றில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இத்தகைய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்