போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-08-13 12:48 GMT

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஏராளமான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. மேலும் இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மாடுகள் சாலைகளில் படுத்துக் கொள்வதினால், இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி மாடுகளின் மீது வானத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்