புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி தொடங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும் போதிய அளவு பஸ் வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அரிமளத்தில் ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வங்கிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. இருந்தபோதிலும் இப்பகுதியில் போதுமான அளவு பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.