தேவையற்ற வேகத்தடைகள்

Update: 2023-08-13 11:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஆலங்குடி, வடவாளம் என 2 வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் கிலோ மீட்டருக்கு 2, 3 என தலா 30-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் வரையறை இன்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அனுமதி இன்றியே பல வேகத்தடைகள் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடற்ற வேகத்தடைகளால் வாகனங்களை உரிய நேரத்தில் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. எனவே தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்