கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் ஓசூர், பெங்களூருவிற்க்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காகவும், மருத்துவ காரணங்களுக்காகவும் சென்று வருகிறார்கள். அதேபோல ஓசூர், பெங்களூருவில் இருந்தும் பலரும் வேலைக்காகவும் செல்கிறார்கள். இதனால் ஓசூர், பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காலை 9 மணி வரையில் அனைத்து பஸ்களிலும் படிக்கட்டில் தொங்கியபடி பலரும் பயணம் செய்கிறார்கள். எனவே கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டத்திற்கேற்ப ஓசூர், பெங்களூரு நகரங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.