பஸ் வசதி வேண்டும்

Update: 2022-07-24 16:20 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து நல்லம்பூர், நரசிங்கமங்கலம், கண்டியூர், மாத்தூர் கிராமம் வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா பரவல் காரணமாக மேற்கண்ட வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் இயக்கபடாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பிய பின்பும் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வலங்கைமான் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து சென்று வருகின்றனர். எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்