கரூர் மாவட்டம் ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் வேலுச்சாமிபுரம் முதல் ஆத்தூர் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.