பட்டுப்போன புளிய மரம்

Update: 2023-08-09 11:51 GMT

அரியலூர் மாவட்டம் அரியலூர்- ஜெயங்கொண்டம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது வெங்கட கிருஷ்ணாபுரம் கிராமம். இந்த சாலை வழியாக தினமும் 24 மணி நேரமும் சிமெண்டு ஆலைகளுக்கு எண்ணற்ற கனரக வாகனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வாகனங்களும் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இங்குள்ள சாலையின் வடக்கு புறத்தில் பழமையான புளியமரத்தின் கிளைகள் பட்டு போய் காற்றில் ஆடுகிறது. தற்சமயம் காற்றாடிக்காலம் என்பதால் இந்த புளிய மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து சாலையில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் மோசமான சூழல் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்