திருச்சியில் இருந்து புதுக்கோட்டை உள்ளே நுழையும் இடத்தில் சாலையில் ஒரு ரெயில்வே கிராசிங் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவில் செல்லும் போது இந்த பள்ளங்களால் அதிக சிரமம் அடைகின்றனர். மேலும் அங்கே 2 வேகத்தடைகள் உள்ளது. அந்த வேகத்தடைகள் சற்றே உயரமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.