கரூரில் இருந்து வாங்கல் வழியாக சேலத்திற்கு ரெயில்வே இரும்புப் பாதை அமைக்கப்பட்டு அந்த வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன. ரெயில்வே பாதைக்கு குறுக்கே செல்லும் தார் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் செல்லும் தார் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மேல் பகுதி நெடுகிலும் சிதலடைந்து காணப்படுகிறது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.