கோபியில் இருந்து அந்தியூர், பட்லூர், வெள்ளித்திருப்பூர், சனிசந்தை வழியாக சென்னம்பட்டிக்கு தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு கொரோனா 2-ம் அலை ஊரடங்குக்கு பிறகு இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், கூலிவேலைக்கு செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் புதிதாக நகர பஸ் ஒன்று சென்னம்பட்டி-கிட்டாம்பட்டி வரை அனைத்து நாட்களிலும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?