போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-08-06 16:51 GMT

நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதேபோல் டாக்டர் சங்கரன் சாலை, பரமத்தி சாலை, மோகனூர் சாலை போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் சாலையோரம் இருபுறமும் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குப்படுத்த போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்