சுகாதாரமற்ற பஸ் நிலையம்

Update: 2023-08-06 15:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மூக்கை பிடித்தபடி நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்