பராமரிப்பில்லாத பயணிகள் நிழலகம்

Update: 2023-08-06 13:42 GMT

நாகை காடம்பாடி அரட்சா தர்கா எதிரே பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக நிழலகத்தில் மேற்கூரைகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரிகிறது. இருக்கைகளும் சேதமடைந்து இருப்பதால் மாணவ-மாணவிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே, பயணிகள், மாணவ-மாணவிகள் நலன்கருதி பயணிகள் நிழலகத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்