தாமதமாக நடக்கும் விரிவாக்க பணி

Update: 2023-08-06 13:40 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சாலையில் பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் தாமதமாக நடைபெறுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணியை விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்