போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-06 13:19 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் முன்பு உள்ள சாலையை ஆக்கிரமித்தபடி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளால் அடிக்கடி அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.




மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி