தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள், வேக தடுப்புகள் வைக்கக்கூடாது என்று விதி உள்ளது. மேலும் சுங்க கட்டணம் செலுத்தி விரைந்துபயணம் செய்ய இந்த சாலைகளில் முடிவதில்லை. அரியலூர் மாவட்டத்தில் அனைத்து சாலைகளிலும் நூற்றுக்கணக்கான இரும்புகளால் செய்யப்பட்ட வேகத்தை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வரை செல்லும் போது வாரணவாசியில் இருந்து பிள்ளையார் கோவில், சமத்துவபுரம், வட்டார போக்குவரத்து அலுவலகம், போலீஸ் நிலையம், சிதம்பரம் சாலை மேம்பாலம், பெட்ரோல் விற்பனை நிலையம் வரை 6 இடங்களில் இரும்பு தடுப்புகளால் வேகதடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 13 கிலோ மீட்டர் உள்ள இந்த சாலையை கடக்க அரை மணி நேரம் ஆகின்றது. இரும்பு தடுப்புகளில் முழுமையாக தகரங்கள் வைத்து மறைக்கப்பட்டு உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் பல விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.