பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் அம்மாபாளையம், பஸ் நிறுத்தம், அரசு பள்ளி ஆகிய மூன்று இடங்களில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், இந்தப் பகுதிகளில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.