பாராக மாறிய பயணிகள் நிழற்குடை

Update: 2023-08-02 17:27 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தென்புறநாடு ஊராட்சி டாப்செங்காட்டுப்பட்டியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் பயணிகள் யாரும் இந்த நிழற்குடையை பயன்படுத்துவது இல்லை. இதனால் பயணிகள் கால்கடுக்க வெயிலிலும், மழையிலும் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்