திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரிலிருந்து பெரியசாமி கோவில் செல்லும் சாலையோரங்களில் நாணல்கள் உயரமாக வளர்ந்து நின்று, சாலைகளை மறைக்கின்றன. இதனால் சாலையின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. பெரியசாமி கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் மோட்டார் சைக்கிள், கார், வேன்களில் வரும்போது விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.