திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள பெருமாள்மலை திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு வைணவ மலைவாசல் தலமாகும். அடிவாரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் சாலை வழியாகவும், 1,570 படிக்கட்டுகள் வழியாகவும் மலையின் உச்சியிலுள்ள கோவிலை அடையலாம். விசேஷ நாட்களில் வாடகை வேன்கள் மூலம் பொதுமக்கள் சென்று வருகின்றனர். சாதாரண நாட்களில் ஏழை பக்தர்கள் படிக்கட்டு வழியாகவே ஏறி செல்வதால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு இந்து அறநிலையத்துறையினர் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.