சிவகங்கை மாவட்டம் கீழடி தமிழர்களின் வரலாறு மற்றும் கலாசாரத்தை உலகிற்கு பறைசாற்றும் மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அண்டை மாவட்டங்களில் இருந்து கீழடிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.