சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின் ரோட்டில் ரெயில்வே கேட் அருகில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலும் சாலையின் இருபுறமும் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையில் குவிந்த மண்ணை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.