புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம் ஆகிய பகுதிகள் பொதுமக்கள் மிகுந்த பகுதியாக உள்ளது. அனைத்து பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் போன்றவை இந்த பகுதியை கடந்து தான் செல்லவேண்டும். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இல்லாததால் விதிமீறல்கள் தொடர்கின்றன. பலர் சாலைகளில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். எனவே கறம்பக்குடி சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம் பகுதிகளில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.