சென்னை கொளப்பாக்ம் மற்றும் கிருகம்பாக்கம் பகுதிகளில் கடநத் 3 ஆண்டுகளாக பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அத்யாவசியமான பொருட்கள் வாங்குவதற்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.