பெரம்பலூர் மாவட்டம், ஓதியம் குலைக்காரன் குளம் முதல் மூங்கில்பாடி பெரிய பாலம் வரை முறையான பாதை வசதி இல்லாமல் உள்ளது. இந்த வழியில் தான் ஆதனூர், ஓதியம், மூங்கில்பாடி, மக்களின் விளை நிலங்கள் அமைந்துள்ளது. அதற்கு சரியான பாதை வசதி இல்லாததால் இடுபொருள்கள் கொண்டு செல்வதற்கும், அறுவடை காலங்களில் விளை பொருட்கள் எடுத்து வருவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் இதைவிட மிகுந்த சிரமமாகவும் இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.