கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை, சென்னை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. நகர் பகுதியில் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலைக்கு செல்பவர்களும் செல்கிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை குறிப்பிட்ட நேரத்தில் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பகலில் நகருக்குள் கனரக வாகனங்கள் வருகின்றன. குறிப்பாக லாரிகள் நீண்டநேரம் சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்குவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பெருநகரங்களில் உள்ளதை போல காலை 8மணி முதல் இரவு 8 மணி வரையில் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வராமல் இருக்க போக்குவரத்து பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.