மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2023-08-02 11:59 GMT

அரியலூர் மாவட்டம், விளாங்குடி இருந்து கா.அம்பாபூர்க்கு செல்லும் சாலையில் தரை பாலம் ஒன்று உள்ளது. இந்த தரை பாலம் வழியாக அண்ணா பல்கலைக்கழகம், கா.அம்பாபூர், காவனூர், அலுமேலுமங்கைபுரம், ஐய்க்கால், பாளையக்குடி, இரும்புலிக்குறிச்சி, செந்துறை உள்ளிட்ட 50-க்கும் அதிகமாக கிராமமக்கள் பயன்படுத்த கூடிய பாலமாகும். இந்த பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களும், அரசு பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களும், வியாபாரம் செய்து வரும் பொதுமக்களும், கால்நடைகள் மேய்த்து வருபவர்களும், விவசாயிகளும் சென்று வருகிறார்கள். மேலும் இந்த பாலம் வழியாக தான் கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் வெளி ஊரில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பாலத்தை கடந்து தான் விளாங்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல கூடிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் மழை காலங்களில் கனமழை பெய்வதால் தரைப்பாலத்தில் மேலே 4 அடி உயரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும், விவசாயிகளும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் தரைப்பாலம் தண்ணீர் மூழ்கியதால் மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி ரொம்பவும் அவதிப்படுகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்