கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-07-24 15:10 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து நாடாமங்கலம், உதராப்புளி வழியாக சிவகங்கை செல்லும் பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிவகங்கையில் இருந்து கருமத்தக்குடி வழியாக வேளாரேந்தல் செல்லும் பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்