அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டிக்கு பவானி மற்றும் ஈரோட்டிலிருந்து அம்மாபேட்டை மார்க்கமாக பல தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனால் கொரனாவுக்குப் பின் பல பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் அம்மாபேட்டை வழி தடத்தில் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.