விளம்பர பதாகைகள்

Update: 2023-07-26 10:30 GMT

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்து உள்ளனர். சமீபத்தில் வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஒரு விளம்பர பதாகை கீழே சாய்ந்து விழுந்தது. அந்த சமயத்தில் அருகில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக ஆபத்து ஏற்படவில்லை. எனினும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே விதிமுறைகளை மீறி வைத்துள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்