கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியில் இருந்து செட்டியக்காபாளையத்துக்கு செல்லும் சாலையோரத்தில் வளைவு உள்ள இடம் என்பதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்த பலகை கடந்த சில மாதங்களாக கீழே சாய்ந்து கிடக்கிறது. இதனால் வளைவு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கை பலகையை தூக்கி நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.