பெருந்துறை-சென்னிமலை ரோட்டில் உள்ளது எல்லமேடு சந்திப்பு. இங்கிருந்து சிப்காட், வெள்ளோடு, ஈங்கூர் பகுதிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகிறார்கள். ஆனால் எல்லமேடு சந்திப்பில் எந்த பஸ்களும் நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எல்லமேடு சந்திப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?