கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை இருந்து கந்தம்பாளையம் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது உழவர் சந்தை அருகே தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டுப்பட்டுள்ளது. இந்த பாலம் சாலையை விட சற்று உயரமாக கட்டப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.