கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-07-23 12:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து திருச்சிக்கு தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் போதிய பஸ் வசதி இன்றி அந்த நேரத்திற்கு வரும் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சிலர் படியில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்